`கிராமத்தை காணவில்லை'..ஊர் முழுக்க ஒட்டிய போஸ்டர் - பரபரப்பில் விருதுநகர்
சாத்தூர் அருகே ஒரு கிராமத்தையே காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, 1933ம் ஆண்டு வாக்கில் கோட்டை சூரங்குடி என்ற கிராமம் இருந்துள்ளது. அதன் பிறகு அங்கிருந்தவர்கள் இடம் பெயர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோட்டை சூரன்குடி கிராமத்தை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கிராமம் காணாமல் போனதை கண்டு கொள்ளாத தாசில்தார், சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://youtu.be/IOZRCywov1Q