Vijay Stampede | விஜய்யை பார்த்து SV சேகர் சொன்ன `அந்த’ வார்த்தை - நடிகர் பிரபு சொன்ன கருத்து
கரூர் விவகாரத்தில் அரசு தனது கடமை செய்த பிறகும் விஜய் குறை சொல்வது அவரது கோழைத்தனம் என நடிகர் எஸ்.வி. சேகர் விமர்சித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் விகாரத்தில் 36 மணி நேரம் கழித்து வருத்தமான முகத்தோடு விஜய் வீடியோ வெளியிட்டதாக விமர்சித்தார்.