தான் பொது வெளியில் வரமாட்டேன் என்று கூறியவர்கள் எல்லாம் தற்போது புலம்பிக்கொண்டிருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
தனது செய்திகுறிப்பில், முப்பெரும் விழாவிற்காக திமுகவினருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்திலேயே தவெகவை பார்த்து புலம்பியதாக விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெயரை குறிப்பிடாமல் புதிய எதிரி என எழுதியதோடு, வெறுப்பையும், விரக்தியையும் கக்கியதாக சாடியுள்ளார். உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி வருவதாக குற்றம்சாட்டியுள்ள விஜய், தமிழ்நாட்டை கடந்து தவெகவிற்கு இருக்கும் புத்தெழுச்சி, திமுகவை குமுற வைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
தூய்மை பணியாளர் போராட்டம், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவின் நடவடிக்கை எப்படி இருந்தது என மக்கள் அறிவார்கள் என குறிப்பிட்டுள்ள விஜய்,
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோதே அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், வெறும் கவர்ச்சியை மட்டும் வைத்திருப்பவர் என திமுகவினர் சாடியதாகவும், தற்போது தவெகவை மட்டும் விமர்சிக்காமல் இருப்பார்களா எனவும் ஆதங்கப்பட்டுள்ளார்.
யார் எப்படி கூப்பாடு போட்டாலும் 1967, 1977 போல 2026ல் தவெக முதன்முறையாக ஆட்சியை பிடிக்கும் என விஜய் நம்பிக்கை தெரிவித்தார்.