குடிகாரர்களின் கூடாரமான மாணவர்களின் பெஞ்ச், மேசைகள் | வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பெஞ்ச் மேசைகளில் மது அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனூர் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இங்கு பயிலும் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பெஞ்ச், மேசைகள் உள்ளிட்டவைகள் கிராம சேவை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கவனிப்பாரற்று கிடக்கும் பெஞ்ச் மேசைகளில் மது அருந்துவது மற்றும் மதுபாட்டில்கள் கிடக்கும் வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது.