மெல்ல மெல்ல வளர்ந்த வாய் சண்டை - டிராக்டரை எடுத்து வந்து வெறியாட்டம்

Update: 2025-07-12 06:55 GMT

இருதரப்பினர் இடையே கைகலப்பு - போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இரு தரப்பினர் சண்டையிடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. குமராட்சி பகுதியில் இரண்டு தரப்பாக இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அப்போது இளைஞர் ஒருவர் டிராக்டரை வேகமாக இயக்கி இடிக்க வருவதும் போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. விசாரணையில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் வெள்ளூர் - இளங்காம்பூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. கைக்கலப்பில் ஈடுபட்டு இரண்டு நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் குமராட்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்