தமிழகமே எதிர்பாரா திருப்பம்..சினிமாவிலே இல்லாத கொடூர ட்விஸ்ட்..இந்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உண்மையா?

Update: 2025-01-25 03:07 GMT

வேங்கைவயல் விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் உள்ள தகவல்கள் தான், சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 3 பேர் குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களும், குற்றவாளிகளும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என கூறப்படுகிறது. குற்றவாளிகளுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை மட்டுமே கிடைக்க வாய்ப்பிருப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

வேங்கைவயலில் நீர்தேக்க தொட்டியில் 2 பேர் மனிதக் கழிவுடன் அமர்ந்திருக்கும் வீடியோவைத் தொடர்ந்து 2 ஆடியோக்களும் பரவி வருகிறது. அதில், சுதர்சன் தனது குடும்பத்தினரிடம் பேசுவது போன்று குரல் பதிவு இடம் பெற்றுள்ளது. மற்றொரு ஆடியோவில், சுதர்சனின் தாயார், சுதர்சனை செல்போனில் தொடர்புகொண்டு, போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்ளக்கூடாது என்று கூறுவது போன்றும் உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்