காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது. மலர்கள், மின் விளக்குகள், பழங்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேதப்பாராயணமும், தீபாராதனைகளும் இடம்பெற்ற இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.