நாளையுடன் மகா கும்பமேளா நிறைவு...இன்னும் குறையாத கூட்டம் - திரளும் பக்தர்கள்
நாளையுடன் மகா கும்பமேளா நிறைவு...இன்னும் குறையாத கூட்டம் - திரளும் பக்தர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் மகா கும்பமேளா நாளையுடன் நிறைவடைகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை திரிவேணி சங்கமத்தில் சுமார் 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினார்கள். சிவராத்திரி தினத்தன்று மகா கும்பமேளா நிறைவடைய உள்ளது. இதையொட்டி, பிரயாக்ராஜ் நகரில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.