எமனாக வந்த சரக்கு லாரி.. ராணுவ வீரர் கொடூர பலி.. சரக்கு லாரி மோதி விபத்து - ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி, மதுரை உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், ராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேப்பம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் செல்வபாண்டி, விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த போது, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. அவருடன் மைத்துனர் அருண்குமாரும், பைக்கில் சென்ற நிலையில், விபத்தில் சிக்கி பலியானார். இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.