உயிருக்கு போராடிய மனைவியை காப்பாற்ற தன்னுயிரையே விலையாக கொடுத்த கணவன்

Update: 2025-08-26 13:09 GMT

Husband Wife | உயிருக்கு போராடிய மனைவியை காப்பாற்ற தன்னுயிரையே விலையாக கொடுத்த கணவன்

மயிலாடுதுறையில் மனைவியை காப்பாற்றி விட்டு கணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் ஓட்டுநராக பணிபுரியும் தினேஷ்குமாரின் மனைவி வீட்டு மாட்டியில் துணி காயவைக்கும் போது, அருகில் இருந்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியது. அவரை மீட்க முயன்ற கணவர் தினேஷ்குமார் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இதனால் மின்சாரத் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஊர் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்