ஐஐடியில் படிக்க தேர்வாகி பழங்குடியின மாணவி அசத்தல்
சேலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ஜேஇஇ தேர்வில் வெற்றிப்பெற்று ஐஐடியில் சேர்ந்து பயில தேர்வாகியுள்ளார். இது குறித்து பேசிய அவரது அண்ணன், தனது தங்கையை நினைத்து பெருமையாக உள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதியைச் சேர்ந்த ஆண்டி - கவிதா தம்பதியின் மகள் ராஜேஸ்வரி. பொறியியல் பயில விரும்பிய இவர், ஜேஇஇ நுழைவுத்தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 417வது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து பேசிய மாணவியின் அண்ணன் ஸ்ரீ கணேஷ் ,தங்களது குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளதாகவும், ராஜேஸ்வரி சிறு சிறு காட்டு வேலைகள் செய்து வந்த நிலையிலும், படிப்பை விடாமல் தொடர்ந்து படித்து நல்ல நிலையை அடைந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.