வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் கூட முடியவில்லை.. இளைஞருக்கு நேர்ந்த சோக சம்பவம்
வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் கூட முடியவில்லை.. இளைஞருக்கு நேர்ந்த சோக சம்பவம்
வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் ஏரியில் மூழ்கி இளைஞர் பலி
பட்டப்படிப்பு முடித்து பணிக்கு சேர்ந்த முதல் நாள் அன்றே
காஞ்சிபுரம் மாவட்டம் சொரப்பணஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மாறன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மாலையில் ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து விட்டதால் புதனன்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. இந்த நிலையில், மதியம் ஒரு மணி அளவில் மாறனின் சடலம் ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.