Tamilnadu Tourism | சுற்றுலா செல்பவர்கள் உஷார்.. வெளியான அதிர்ச்சி தகவல்
"தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்துக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்கள்"
தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்துக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. google தேடலின் போது, தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணையதள பக்கத்தை தேடும் பொது மக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு மோசடி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு பணத்தை ஏமாற்றுவது தெரிய வந்துள்ளது. இவ்வாறு ஆன்லைன் மூலம் அறையை புக் செய்து பல பொதுமக்கள் ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது. இது போல் பல மாவட்டங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு புகார் வந்ததையடுத்து, மூத்த மேலாளர் ஆதாரங்களுடன் தமிழக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து, போலி இணையதளத்தை உருவாக்கிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.