காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.05.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-05-30 00:31 GMT
  • அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி.. அன்புமணி தவறான ஆட்டத்தை துவக்கி விட்டதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
  • கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்திய கட்சியில் அன்புமணி கலக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக உருக்கம்.. தகப்பனிடம் மகன் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல என்று பேட்டியின்போது கண்கலங்கினார் ராமதாஸ்...
  • தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்.. இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில், பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு...
  • சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் இன்று பா.ம.க நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்... ஜூன் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்..
  • ராமதாஸ் - அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரித்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்...சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு....
  • 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் இன்று பாராட்டு விழா....மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கல்வி விருது வழங்கி கவுரவிக்கிறார், விஜய்....
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, 6 சதவீதம் சம்பள உயர்வு.... 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்... அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உட்பட 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு....
  • தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் போக்குவரத்துத்துறை.... 2018ம் ஆண்டில் கடைசியாக பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கருத்துக்கேட்பு....
  • மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி..... அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்....
  • கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் 'தக் லைஃப்' வெளியாகாது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் அறிவிப்பு... கமல் என்ன விளக்கம் கூறினாலும் ஏற்க மாட்டோம், கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திட்டவட்டம்...
  • தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.... தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்....
  • தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு மக்கள் மீது பாசம் வரும்..., பல திட்டங்களை அறிவிப்பார்கள்.... விருதுநகரில் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்...
  • ஐ.பி.எல் தொடரின் முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் பெங்களூரு அணி வெற்றி.... பஞ்சாப் அணியை வீழ்த்தி, 9 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது....
Tags:    

மேலும் செய்திகள்