Today Headlines | காலை 9 மணி தலைப்புச்செய்திகள் (23.09.2025) 9 AM Headlines | ThanthiTV
- வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...வரும் 27ம் தேதி ஒடிசா-ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
- தங்கம் விலை ஒரேநாளில் ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து சவரன் 83 ஆயிரத்து 440 ரூபாய் விற்பனை ஆனது... ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலையால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...
- ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக ஆவின் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது...ஒரு லிட்டர் நெய்யின் விலை 690 ரூபாயில் இருந்து 650 ரூபாய்க்கும், 200 கிராம் பன்னீர் விலை 110 ரூபாய்க்கும் குறைக்கப்பட்டுள்ளது
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.... காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் தொடங்குகிறது.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்திற்காக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வழியாக எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு பயணம் மேற்கொண்டார்....