Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.06.2025) | 6AM Headlines | ThanthiTV

Update: 2025-06-12 00:35 GMT
  • கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, நீலகிரிக்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை... கோவை மற்றும் நீலகிரிக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை சென்றுள்ளதாக அறிவிப்பு...
  • ராக்கிங் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால், 5 தமிழக பல்கலைக்கழகங்கள் உட்பட 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்... 30 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு...
  • ஜூலை ஒன்றாம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்... ஆதார் அட்டை பெற்ற பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என, ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு...
  • கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 13ம் தேதி 385 சிறப்பு பேருந்துகளும், 14ம் தேதி 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டம்... கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு...
  • காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்...
  • ஈரோட்டில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் 11 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்... தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு...
  • நாள்தோறும் பல பெயர்களை சூட்டிய விளம்பர ஆட்சியைத்தான் அதிமுக நடத்தியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி... ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்திலேயே, தன் பெயரைப் பதித்த பழனிசாமி விளம்பரம் பற்றியெல்லாம் பேசலாமா? என்றும் கேள்வி...
  • தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் 50 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ்... அண்ணா பல்கலை. விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசியதற்காக, முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் நடவடிக்கை...
  • பாமகவில் தொடர்ந்து நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வரும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்... கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு...
  • பாமகவின் சமூக நீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் பாலு தொடர்வார்...அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்...
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி... சுமார் 2 மணி நேரத்திற்கு பின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ரயில் சேவை தொடங்கிய நிலையில், பயணிகள் கூட்டம் அதிகரிப்பு...
  • அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆயிரத்து 200 பிஎஸ்எஃப்(BSF) வீரர்களை அழைத்துவர அனுப்பப்பட்ட ரயில் பெட்டிகள் மோசமாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு...சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, ரயில் பெட்டிகளில் இருந்த ரேக் மாற்றப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்...
  • ஆர்.சி.பி அணியை வாங்கப்போவதாக வெளியான தகவலுக்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்ட மறுப்பு....நான் ராயல் சேலஞ்ச் மதுவைக்கூட குடிக்கமாட்டேன்..., நான் எப்படி ஆர்.சி.பி அணியை வாங்குவேன் எனவும் கேள்வி.....
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட்...முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 43 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா...
  • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் கோவை அணியை வீழ்த்தி மதுரை அணி வெற்றி... 170 ரன்கள் என்ற இலக்கை, 17.5 ஓவரில் எட்டி, நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை...
  • பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த விரைவில் தடை விதிக்கப்படும் என அறிவிப்பு..பிரான்சின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த கொடூரமான தாக்குதலை தொடர்ந்து நடவடிக்கை...
Tags:    

மேலும் செய்திகள்