Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.07.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-07-23 00:33 GMT
  • போலீஸ் விசாரணையின் போது அடித்துக்கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்...தமிழ்நாடு அரசுக்கு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு...
  • குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு... ஜெகதீப் தன்கர் ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புவதாக பிரதமர் மோடி வாழ்த்து...
  • குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் சந்திப்பு.... ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், துணை குடியரசுத் தலைவராக வாய்ப்பு....
  • நாடாளுமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு மதிப்பாய்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் கடும் அமளி...இரு அவைகளும் 2வது நாளாக முடக்கம்....
  • பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த‌த்திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்... ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, சமாஜ்வாதி எம்பிக்கள் பங்கேற்பு....
  • தூத்துக்குடியில் 452 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை, வரும் 26ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...27 ஆம் தேதி கங்கை கொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்..
  • முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் எனவும் விளக்கம்...
  • திமுக கூட்டணி உடையும் என, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து... திமுகவின் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக 2026 இருக்கும் எனவும் பேச்சு...
  • 199 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி... வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு...
  • தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு நிச்சயம் இருக்காது... போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்...
  • மதுரை மாநகராட்சியில்150 கோடி வரை சொத்துவரி முறைகேடு நடந்த விவகாரம். தங்கள் பாஸ்வேர்டை மேலதிகாரிகள் திருடி, வரி குறைப்பு செய்துள்ளதாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு...
  • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்... தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ள நிலையில், 4வது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா...
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் பவர் ஹவுஸ் பாடல் வெளியானது... அனிருத் இசையை கொண்டாடி வரும் ரசிகர்கள்...
Tags:    

மேலும் செய்திகள்