Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.12.2025) | 6AM Headlines | ThanthiTV

Update: 2025-12-30 00:55 GMT
  • வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது... சிறப்பு பூஜைக்கு பின் காலை 5.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அணிந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்...
  • சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை நான்கரை மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது... சிறப்பு பூஜைக்கு பின் பல்லக்கில் எழுந்தருளிய பார்த்தசாரதி பெருமாளை கண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்...
  • பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சம அதிகாரம் கிடைப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்... பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்தது திராவிடம் இயக்கம்தான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்....
  • மகளிருக்கான திட்டங்களை திராவிடமாடல் அரசு பார்த்து பார்த்து உருவாக்கி நிறைவேற்றி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்... கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 28 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
  • திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்... வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாகவும் விமர்சித்தார்...
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்... போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்