Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.01.2026) | 6AM Headlines | ThanthiTV

Update: 2026-01-14 00:38 GMT
  •  பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற ஆன்றோர் வாக்குக்கிணங்க, பிறந்தது போகிப் பண்டிகை... பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக, 'போகிப் பண்டிகை' தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது
  • குளிர்காலத்தின் முடிவையும், அறுவடைக்காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் 'லோரி' பண்டிகை இன்று வட இந்தியா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது...
  • போகி பண்டிகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன... சென்னையில் இருந்து இன்று காலை விஜயவாடா மற்றும் தூத்துக்குடி செல்லும் விமானங்கள் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
  • பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது... முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் இடம்பிடிக்க பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்...
  • பொங்கல் தொடர் விடுமுறை தொடர்ந்து சென்னையில் இருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கடந்து சென்றுள்ளன... பொதுமக்கள் சிரமம் இன்றி செல்ல ஏதுவாக சுங்கச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
  • ஈரான் போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புக்கு பயங்கரவாதிகளே காரணம் எனவும் ஈரான் அரசு தரப்பு தெரிவித்துள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்