Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22.07.2025) | 6AM Headlines | ThanthiTV

Update: 2025-07-22 00:30 GMT
  • குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா... மருத்துவ காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவிப்பு...
  • குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் இனிமையான பணி உறவுக்கு நன்றி என ஜெகதீப் தன்கர் உருக்கம்... பிரதமர் மோடியின் அசைக்க முடியாத ஆதரவுக்கு கடமைப்பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சி...
  • உடல்நலக்குறைவு காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி... நடைபயிற்சி சென்ற போது, தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை...
  • முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்...மருத்துவமனையில் இருந்தபடி அலுவல் பணியை மேற்கொள்வார் என தகவல்...
  • முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்... மருத்துவ பரிசோதனை முடிவுக்கு பிறகு, டிஸ்சார்ஜ் குறித்த முடிவு எடுக்கப்படும் எனவும் விளக்கம்...
  • சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துர்கா ஸ்டாலின் எழுதிய "அவரும் நானும்" நூலின் இரண்டாம் பாகம் நூல் வெளியீடு....முதல்வர் ஸ்டாலின் வரவில்லை என்றாலும், அவரது மனம் முழுவதும் நிகழ்ச்சியை சுற்றியே இருப்பதாக துர்கா ஸ்டாலின் உருக்கம்...
  • பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி, விழாவுக்கு வந்த துணை முதல்வருக்கு நன்றி எனக்கூறிய துர்கா ஸ்டாலின்.. தாயின் சொல்லால், கலகலப்பான உதயநிதி ஸ்டாலின்...
  • அவரும் நானும் நூல் வெளியீட்டு விழாவில் பேசி முடித்த பின், அப்பாடா என கூறிய துர்கா ஸ்டாலின்...10 நிமிடங்கள் பேசிய அவர், உரை முடிந்ததும் அப்பாடா என கூறி சிரித்து மகிழ்ந்தார்...
  • பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளி... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் முடக்கம்...
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெறும் என நம்புவதாக பிரதமர் மோடி பேட்டி... சுபான்ஷு சுக்லாவால் நம் தேசியக் கொடி விண்வெளியில் பறப்பதாகவும் பெருமிதம்...
  • "பயங்கரவாதத்தின் இலக்கை ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகர்த்துள்ளோம்"... நம் ராணுவத்தின் 100 சதவீத வெற்றியை ஆபரேஷன் சிந்தூர் பறைசாற்றுகிறது எனவும் பிரதமர் மோடி புகழாரம்...
  • கோவாவில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்ற இண்டிகோ விமானத்தில், தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு... அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய பயணிகள்...
  • 2006-ல் 189 பேர் உயிரிழப்புக்கு காரணமான மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவம்.... குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு...
  • ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி.. இரு அவைகளிலும் தனி பெரும்பான்மையை இழந்த ஆளுங்கட்சி...
Tags:    

மேலும் செய்திகள்