காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | Thanthi TV

Update: 2025-07-18 04:03 GMT
  •  நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை...
  • தனது உயிருக்கு ஆபத்து உள்ளது.... உயர் அதிகாரிகள் டார்ச்சர் தாங்க முடியவில்லை என மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி....
  • மயிலாடுதுறையில் கார் கொடுக்க மறுக்கப்பட்டதாக கூறி நடந்தே அலுவலகம் செல்லும் டி.எஸ்.பி...
  • 100 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பு....
  • இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு நிபந்தனை முன் ஜாமின்....
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை...
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி புகார்....
  • ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது...இன்னும் 3 நாட்களில் உண்மை தெரியவரும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி...
  • டெல்டா மாவட்டங்கள் இனி திமுக கோட்டை அல்ல...பூம்புகாரில் நடைபெற்ற மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம் பேரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • அடுத்த 30 நாட்களில் 2.5 கோடி பேரை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என தி.மு.க மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம்....
  • காமராஜர் பற்றிய சர்ச்சைக்குரிய மற்றும் வீண் விவாதங்களை தவிர்ப்போம்...கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்...
Tags:    

மேலும் செய்திகள்