Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25-09-2025) | 11AM Headlines | Thanthi TV

Update: 2025-09-25 05:59 GMT
  • முதல் முறையாக மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது....இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்...
  • லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கி, 6வது அட்டவணையில் சேர்க்க கோரி நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது 'ஜென் Z' வன்முறையைத் தொடர்ந்து பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163ன் கீழ் லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...
  • திருப்பதி பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் சுவாமி, பத்ரி நாராயணனாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நான்கு மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் பெருமாளை மனம் குளிர தரிசனம் செய்தனர்...
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் அணியை இந்திய அணி வீழ்த்தியது...முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது...

Tags:    

மேலும் செய்திகள்