டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24வது லீக் போட்டியில் நெல்லையை 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் வென்றது. நெல்லையில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரீஷ் 43 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய திண்டுக்கல் அணியில் டாப்-ஆர்டர் (top order)வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும் மிடில் ஆர்டர் (middle order) வீரர்கள் பொறுப்புடன் விளையாடினர். அதிகபட்சமாக விமல் குமார் 45 ரன்கள் எடுக்க, 19வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டிய திண்டுக்கல் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,.