Tirupathur | JCB |எதிர்பாராத நேரத்தில் உருண்டு விழுந்த ராட்சத பாறை..நொறுங்கிய ஜேசிபி.. டிரைவர் நிலை?

Update: 2025-08-09 07:16 GMT

எதிர்பாராத நேரத்தில் உருண்டு விழுந்த ராட்சத பாறை.. நொறுங்கிய ஜேசிபி.. டிரைவர் நிலை?

ஜேசிபி மீது விழுந்த ராட்சத பாறை - உயிர் தப்பிய ஓட்டுனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ராடசத பாறை விழுந்ததில் ஜேசிபி இயந்திரம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அதிஸ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். நாட்றம்பள்ளியில் ஆதிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான குன்று நிலத்தை சமமாக்கும் பணியில், ஜேசிபி ஓட்டுநர் ராஜா ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத பாறை உருண்டு வந்து ஜேசிபி மீது விழுந்தது. இதில் ஓட்டுநர் ராஜா சாதுரியமாக ஜேசிபியில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். ராட்சத பாறைக்கு அடியில் கிடக்கும் ஜேசிபியை பார்க்கும் போது, சிறுவர்கள் விளையாடும் வண்டி போல் காட்சி அளிக்கிறது.  

Tags:    

மேலும் செய்திகள்