திக்..திக்.. பயணத்தில் பயணிகளை கூல் செய்த தமிழ் பைலட்

Update: 2025-06-15 04:20 GMT

மதுரை இன்டிகோ விமானியின் வீடியோ வைரல்

மதுரையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. முதல் விமானத்தை மதுரையைச் சேர்ந்த விமானி இமானுவேல் இயக்கினார். விமானம் புறப்படும் முன் பயணிகளிடம் பேசிய அவர், 4 மணி நேரத்தில் அபுதாபி சென்று விடுவோம், பயணத்தின்போது சந்தோஷமாக இருங்கள் என்று கூறினார். மேலும், நம்ம ஊர் ஃபிளைட் என்பதால் ஜிகர்தண்டா, பருத்திப் பால் எல்லாம் கேட்காதீர்கள் என்று அவர் நகைச்சுவையாக பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்