Thoothukudi | பெண் SSI கணவர் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொ* - கணவரின் உடலை பார்த்து கதறிய காட்சி
நிலத்தகராறு - பெண் எஸ்.எஸ்.ஐ கணவர் வெட்டிப் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தன் தருவை பகுதியைச் சேர்ந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மெட்டில்டா. இவரது கணவர் ஜேம்ஸை அதே பகுதியில் வைத்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.