- 17 வயசுல ஒரு கொலை கேஸ்ல கைதாகி சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு போயிருக்க வேண்டிய பாலாஜி. இப்ப 51 வயதுல கைதாகி புழல் சிறைல அடைக்கப்பட்டு இருக்காரு.
- 34 வர்ஷம் இந்த மனுஷன் குற்ற உணர்வோட தான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருக்காரு.
- இவரோட வாழ்க்கைல அப்படி என்ன தான் நடந்துச்சு ? போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சது எப்படி ? இத்தனை வர்ஷத்துக்கு அப்றம் ஒரு கொலையாளிய கைது பண்ண முடியுமா ? போன்ற சந்தேகங்க கேள்விகளுக்கு விடைக்கான கொலை நடந்த 1991 வது வர்ஷதுக்கு டைம் ட்ராவல் பண்ணி அந்த காலக்கட்டத்துல வெளியான செய்திதாள்கள புரட்டினோம்..
- உலகின் வல்லரசா இருந்த சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது.
- இந்திய பிரதமர் நரசிம்மராவ் ஒன்றிய அரசின் புதிய பொருளாதார கொள்கைய அறிமுகப்படுத்தி இருந்தாரு.
- தமிழகத்தோட முதலமைச்சரா ஜெ. ஜெயலலிதா முதல் முறையா பதவி ஏத்துக்கிட்டாங்க...
- தமிழ் சினிமால ரஜினிகாந்தோட தளபதியும், கமலஹாசனோட குணாவும் ஒண்ணா ரீலீஸ் ஆச்சு..
- இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல செய்திகள் இடம் பெற்றிருந்த அதே வருஷத்துல தான் பாலாஜியும் அவரோட அக்காவும் சேர்ந்து ஒருத்தர கொலை பண்ண சம்பவமும் நடந்துச்சு.
- 1991 பிப்ரவரி 16 ம் தேதி...மெட்ராஸ்க்கு மிக அருகாமையிலிருந்த ஆவடிலதான் அந்த கொலை சம்பவம் நடந்திருக்கு.
- கொலை செய்யப்பட்டவரோட பேரு ரஞ்சித் சிங் ரானா..
- ஒன்றிய அரசுக்கு சொந்தமான HVF- நிறுவனத்துல பணியாற்றி இருக்காரு. அவரோட வயசு 51.
- உத்தரபிரதேசத்துல ரானாவுக்கு மனைவி பிள்ளைகள்னு ஒரு குடும்பம் இருந்திருக்கு. வேலை நிமித்தமா தமிழகத்துக்கு வந்த ரானாவுக்கு மதுமதி அப்படிங்குற தமிழ் பொண்ணோட பழக்கம் ஏற்பட்டு இருக்கு. அவரோட தம்பி தான் இந்த பாலாஜி.
- 1991ல மதுமதியோட வயசு 27, பாலாஜிக்கு வெறும் 17.
- தன்னோட மகள் வயசு உள்ள பெண்ண காதலிச்சு இரண்டாவதா திருமணம் செஞ்சி இருக்காரு ரானா.
- ரெண்டு பேரும் ஆவடில சந்தோசமா வாழ்க்கைய தொடங்கி இருக்காங்க. ஆனா, மது போதைக்கு அடிமையான ரானா தினமும் குடிச்சிட்டு மதுமதிய சித்ரவதை பண்றத வழக்கமா வெச்சி இருக்காரு. அப்படி தான் சம்பவம் நடந்த பிப்ரவரி 16 ம் தேதியும் மதுமதிக்கும், ரானாவுக்கும் கடுமையான சண்டை நடந்திருக்கு. ஆனா அன்னைக்கு மதுமதி தினம் தினமும் அனுபவிச்சிட்டு வர்ற அந்த சித்திரவதைக்கு ஒரு முடிவு கட்ட நினைச்சிருக்காங்க.
- தன்னோட தம்பி பாலாஜிகிட்டா அவங்களோட கஷ்டத்த சொல்லி அழுததும், கொலை வெறியிலிருந்த பாலாஜி, ரானா சிங்க போட்டு பொளந்திருக்காரு. அக்காவும் தம்பியும் சேந்து அடிச்ச அடியில ரானாவால எழுந்திருக்க முடியல.
- இதுக்கு மேல இந்த போதை மிருகத்த சும்மா விடாக்கூடாதுனு நினைச்ச பாலாஜி, மாமனோட தலையில கல்ல போட்டு மிக கொடூரமா கொலை செஞ்சிட்டு எஸ்கேப்பாகி இருக்காரு. அன்னைக்கு இந்த கேஸ்ல மதுமதிய கைது பண்ண போலீஸ், தலைமறைவான பாலாஜிய வலைவீசி தேட ஆரம்பிச்சு இருக்காங்க..
- மெட்ராஸ்ல இருந்து ரயில் ஏறி வடமாநிலத்துக்கு போன பாலாஜி அங்க அவரோட புது வாழ்க்கைய தொடங்கி இருக்காரு
- மும்பை, டெல்லி, கொல்கத்தானு மனம் போன போக்குல பயணிச்ச பாலாஜி அங்கேயே தொழில் கத்துகிட்டு வாழ பழகி இருக்காரு.
- இருந்தாலும் கொலை செஞ்சிட்டமே அப்படிங்குற குற்ற உணர்வு அவர அடிக்கடி உருத்திக்கிட்டே இருந்திருக்கு.
- பல வருடங்களுக்கு பிறகு, மதுமதியும் கொலை கேஸ்ல இருந்து தண்டனை அனுபவிச்சு வெளியே வந்திருக்காங்க.
- அக்காவ பார்க்கனும், பாசமா பேசனும் என்ற எண்ணமெல்லாம் பாலாஜிக்கும் இருந்திருக்கு, நேர்ல போன மாட்டிக்குவோம்னு பயந்து கடுதாசி மூலமா அக்காவ நலம் விசாரிச்சு இருக்காரு.
- ஆனா, அந்த லட்டர் எங்கிருந்து வருதுனு யாருக்கும் தெரியாது.
- அப்படியே அதுல ஒரு From Adress இருந்தாலும் அது பெரும்பாலும் ஃபேக்கான முகவரியா தான் இருந்திருக்கு.
- கிட்டதட்ட 30 வர்ஷத்துக்கு மேலாகியும் இந்த கேஸ்ல அக்யூஸ்ட்ட அரெஸ்ட் பண்ணாம இருந்தது டிப்பார்ட்மெண்டுக்கே ஒரு கரும்புள்ளியா மாறியிருக்கு.
- அதன்காரணமா பாலாஜியோட வழக்க முடிக்கனும்னு ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டு இருக்காரு.
- இதையடுத்து DSP கனகராஜ், இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமைல ஸ்பெஷல் டீம் கிரியேட் பண்ணி இருக்காங்க
- அப்ப அவங்ககிட்ட இருந்த ஒரே Clue, கொலையாளியோட பேரு பாலாஜி அப்படிங்குறது மட்டும் தான். இந்த ஒரே ஒரு பெயர வெச்சிட்டு சவாலான அந்த இன்வஷ்டிகேஷன் தொடங்கி இருக்கு.
- பாலாஜியோட பிறந்த தேதிய வெச்சி அவரோட Birth Certificate-அ கண்டுபிடிச்ச போலீஸ் அவரோட சொந்த ஊரான திருச்சிக்கு போயிருக்காங்க. பாலாஜியோட உறவினர்கள்ள 50 வயசுக்கு மேலான நபர்கள் அத்தனை பேரும் போலீஸோட கண்காணிப்புக்குள்ள கொண்டு வரப்பட்டு இருக்காங்க.
- அதுல, சில நபர்களுக்கு பாலாஜி என்ற பேர்ல இருந்து போன் கால் வந்திருக்கிறது உறுதியாகி இருக்கு. அவங்கள பிடிச்சு யார் அந்த பாலாஜினு விசாரிச்சப்பதான். 34 வருஷமா போலீஸ் தேடி வரக்கூடிய கொலையாளி விருதுநகர் மாவட்டத்துல சொந்தமா வீடு கட்டி மனைவியோட குடும்பமா வாழ்ந்துட்டு வர்றது தெரிய வந்திருக்கு.
- உடனே தனிப்படை போலீசர் விருதுநகருக்கு விரைஞ்சிருக்காங்க. இத்தனை வர்ஷத்துக்கு பிறகு போலீஸ் தன்னை தேடி வந்ததால பாலாஜியும் மறுத்து பேசாம, செஞ்ச குற்றத்த ஒத்துக்கிட்டு சரண் அடைஞ்சிருக்காரு.
- கண்டுபிடிக்கவே முடியாதுனு நினைச்ச கொலையாளிய ஸ்பெஷல் டீம் அரெஸ்ட் பண்ணி இருக்கிறதால காவல் ஆணையர் சங்கர் தனிப்பிரிவு போலீசார வெகுவா பாராட்டி இருக்காரு.
- கைது செய்யப்பட்ட பாலாஜிய அம்பத்தூர் நீதிமன்றத்துல ஆஜார்படுத்தி புழல் சிறையில அடைச்சிருக்காங்க.
- 34 வர்ஷம் குற்ற உணர்வோடய வாழ்ந்த மனுஷனுக்கு இந்த தண்டனையும், புழல் சிறைவாசமும் ஒரு வேள ஆறுதல கொடுக்கலாம்.
- ரானா சிங் மர்டர் கேஸ்ல இருந்து அக்கா மதுமதி விடுதலை ஆன மாதிரியே பாலாஜியும் ஒருநாள் விடுதலையாகி சுதந்திரமா வாழ ஆரம்பிப்பார்னு போலீஸும் அவரோட ஃபேமிலிக்கு ஹோப் கொடுத்திருக்காங்க.