Thiruparankundram | Dharmendra Pradhan | "தி.குன்றம் விவகாரம் : சிவபெருமான் பாடம் புகட்டுவார்.." -
தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ, அதுபோன்று திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கையின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி கல்வி முறையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த விஷயத்தில் சிவபெருமான் பாடம் புகட்டுவார் என்றும் குறிப்பிட்டார்.