Cuddalore | Doctor |மூக்குத்தியை கழற்றும்போது நேர்ந்த விபரீதம்-சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்
பெண்ணின் மூச்சுக் குழாயில் சிக்கிக் கொண்ட மூக்குத்தி திருகாணியை, பிராங்கோஸ்கோப்பி கருவி மூலம் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
கடலூரில் பெண்ணின் மூச்சு குழாயில் சிக்கி கொண்ட மூக்குத்தி திருகாணி அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தை பெண் மூக்குத்தியை கழற்றியபோது திருகாணி தவறுதலாக நுரையீரலுக்குள் சென்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பிரபல நுரையீரல் சிகிச்சை நிபுணர் கலைக்கோவன், பிராங்கோஸ்கோப்பி (Bronchoscopy -நுரையீரல் உள்நோக்கு கருவி )முறை மூலம் திருகாணியை அகற்றினார்.