``முதல்வர் பங்கேற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை’’ - வேல்முருகன் கருத்து

Update: 2025-05-26 04:55 GMT

``நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை’’ - வேல்முருகன் கருத்து

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்... திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் பாஜக அல்லாத கட்சியினரை மிரட்டவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுகவுடன் கூட்டணிதான் வைத்துள்ளது, அக்கட்சியுடன் இணைக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்