``கரண்ட் இல்லை.. இதனால 10th Fail.. ஸ்கூல் போகுறதில்ல’’ - தவிக்கும் கோவை கிராமம்
கோவை மாவட்டம் பொகலூர் ஊராட்சி கூளேகவுண்டன்புதூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படாததால், வீடு கட்ட முடியாத சூழலில் உள்ளனர். இதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறும் மக்கள், பட்டா, மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்