தென்காசி மாவட்டம், அகரக்கட்டு பகுதி அருகே அரசு பேருந்தை முந்த முயன்ற ஒரு பைக், மற்றொரு பைக்கின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், செங்கோட்டையைச் சார்ந்த சுரேஷ் மற்றும் ஆய்க்குடியைச் சார்ந்த ராமையா என்ற முதியவரும் எனத் தெரியவந்துள்ளது. இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, இங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.