சொன்ன வாசகத்தை கிளிப் பிள்ளை போல சொல்லவைத்து மாணவர்களுக்கு Police அறிவுரை

Update: 2025-06-14 06:46 GMT

கடலூர் மாவட்டத்தில் பேருந்தின் படியில் தொங்கி வந்த மாணவர்களிடம், போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சரி செய்து கொண்டிருந்த நிலையில், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் நின்று கொண்டும், தொங்கிக் கொண்டும் வந்தனர். இதனை அடுத்து பேருந்துகளை நிறுத்தி பள்ளி மாணவர்களை இறங்கச் சொன்ன போக்குவரத்து போலீசார், அவர்களுக்கு அறிவுரை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்