மக்களே உஷார்! "அடுத்த 7 நாட்கள் தான் மிக முக்கியம்" - எச்சரித்த வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.