தமிழக-கேரள எல்லையான புனலூரில், தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து தலச்சிரா பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், போதைப்பொருளுடன் சுற்றித்திரிந்த எஸ்எஃப்ஐ மாணவர் அமைப்பின் தலைவர் முஹ்சின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பல லட்சம் மதிப்பிலான 20 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.