கோவையை உலுக்கிய கொலைகார சிறுத்தை கூண்டிலிருந்து வெளியேறி சீறும் காட்சி

Update: 2025-06-27 02:51 GMT

சிறுமியை வேட்டையாடிய சிறுத்தை டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடுவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட் பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தை, டாப்ஸ்லிப் அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது. தாயின் கண் முன்னே சிறுமியை வேட்டையாடிய சிறுத்தை, நீண்ட தேடுதலுக்கு பிறகு, வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்ற வனத்துறையினர் விடுவித்தனர். அப்போது, சிறுத்தை வனப்பகுதிக்குள் சீறிப்பாய்ந்து சென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்