வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் உடன் வந்தவர்கள் நோயாளியை தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர்.
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வர். இந்நிலையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் படுகாயம் அடைந்தவரின் உறவினர்களே அவசர சிகிச்சை பிரிவிலிருந்து 108 ஆம்புலன்ஸுக்கு தூக்கிச்சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.