13 பசுமாடுகளை வேட்டையாடிய புலி - கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
கூடலூர் அருகே பசு மாடுகளை வேட்டையாடி வரும் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறையில் புலி ஒன்று 13 பசுமாட்டை வேட்டையாடிக் கொன்றுள்ளது. இந்நிலையில் 13 பசு மாடுகளை வேட்டையாடிய புலியை பிடிப்பதற்காக 30க்கும் மேற்பட்ட அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இரண்டு கூண்டுகள் உட்பட நான்கு கூண்டுகள் வைத்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.