ராமதாஸை சந்தித்த ஆடிட்டர்.. பின்னணியில் பாஜகவா? - நயினார் சொன்ன பதில்

Update: 2025-06-06 03:01 GMT

பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சினை, அதற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாக கூறினார். மேலும், பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சினை, குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சென்றதற்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்