"கேவலமா இருக்கு..." - ஒரே வார்த்தையில் ரோஜா தக் ரிப்ளை

Update: 2025-07-09 13:08 GMT

ஆந்திராவில் மிக மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆந்திர முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியை விமர்சித்தார்... தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அரசு நிறைவேற்றவில்லை என்றும், ஆட்சி உள்ளதா இல்லையா என்று சொல்லும் அளவிற்கு மிக மோசமான ஒரு ஆட்சி நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்