Thamiraparani River | தாமிரபரணியில் கழிவுநீர் - ரூ 1.55 கோடி இழப்பீடு
தாமிரபரணியில் கழிவுநீர் - ரூ 1.55 கோடி இழப்பீடு
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பான ஆய்வுப் பரிந்துரையில், 1.55 கோடி ரூபாய் இழப்பீடு தொடர்பாக மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தெரியவந்துள்ளது.
ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் கலப்பது தொடர்பாக, பொறியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கழிவு நீர் கலப்பது உறுதி செய்யப்பட்டு, மாநகராட்சி ஆணையாளருக்கு தேவையான உத்தரவுகளை வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமையகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையில், ஏற்கனவே 1.55 கோடி ரூபாய் இழப்பீடு தொடர்பாக மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதையும் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.