திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கதவை திறக்க வலியுறுத்தி கோயில் ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக இரவு 8 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் நேற்று இரவு 7.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில்களில் நடை அடைக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பக்தர்கள் கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்