சேலம் எடப்பாடி எம்.எல்ஏ இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தான் சாகவில்லை உயிருடன் இருப்பாக அவர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி பாமக இரண்டாக பிளவுபட்டதற்கு ஜி.கே.மணி தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் தான் இறந்ததாக வெளியான கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் அதிர்ச்சியான காவேரி , இதனால் கடும் மன உளைச்சலில் இருப்பதாக வேதனை தெரிவித்த அவர் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக கூறினார்.