Tea Shop | Fire Accident | திடீரென தீப்பிடித்து எரிந்த பாய்லர்.. அலறி அடித்து ஓடிய Tea Lovers

Update: 2025-09-19 09:22 GMT

நாகர்கோவிலில் உள்ள தேநீர் கடையில் திடீரென பாய்லர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் முருகேசன் என்பவர் தேநீர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை திடீரென அடுப்பில் இருந்த பாய்லர் தீப்பிடித்து எறிந்தது. டீ மாஸ்டர் தீயை அணைக்க முயன்ற நிலையில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் கடையில் டீ குடித்து கொண்டிருந்தவ அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். பின்னர் தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சு அடித்து அங்கிருந்த கேஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்