டெல்லி தமிழர்கள் பிரச்சினை - டெல்லி முதல்வரிடம் மனு
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை திமுக மக்களவைக் குழு தலைவர் டி ஆர் பாலு நேரில் சந்தித்து டெல்லி தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக மனு அளித்தார்.
டெல்லி ஜங்புரா பகுதியில் தமிழர்கள் நீண்ட காலமாக வசித்து வந்த மதராசி கேம்ப் பகுதியில் குடியிருப்புகல் அகற்றப்பட்டன. இதனையடுத்து வெளியேற்றப்பட்டவர்கள் தமிழகத்தில் குடியேற உதவ தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி முதல்வருக்கு எழுதிய கடிதத்தை நேரில் வழங்கிய டி.ஆர் பாலு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.