சென்னையில் SWIGGY, ZOMATO உணவு டெலிவரி ரத்தா? - மொத்தமாக முடங்கும் அபாயம்

Update: 2025-07-01 03:12 GMT

சென்னையிலும் SWIGGY, ZOMATO உணவு டெலிவரி வசதிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SWIGGY, ZOMATO நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்கு பிறகே பணம் வருவதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக நாமக்கல் பேக்கரி மற்றும் ஹோட்டல் சங்கத்தினர் தெரிவித்தனர்

இதனால் இன்று முதல், நாமக்கல் மாவட்டத்தில் உணவு டெலிவரி இல்லை என நாமக்கல் பேக்கரி மற்றும் ஹோட்டல் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னையில் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டாவிட்டால், சென்னையிலும் SWIGGY, ZOMATO மூலம் உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.சென்னையில் SWIGGY, ZOMATO உணவு டெலிவரி ரத்தா? - மொத்தமாக முடங்கும் அபாயம்

Tags:    

மேலும் செய்திகள்