அகரம் ஃப்வுண்டேஷன் விழாவின் மேடையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிய நடிகர் சூர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
அகரம் பவுண்டேஷனின் விதைத் திட்டம், 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பிரம்மாண்ட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் வெற்றிமாறன், கமலஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவின் மேடையில் அகரம் பவுண்டேஷன் மாணவர் உருவாக்கிய ஸ்கூட்டரை, நடிகர் சூர்யா ஓட்டியுள்ளார்.