சீறிப்பாய்ந்து வந்த காவிரி நீர்... நாகை விவசாயிகள் உற்சாக வரவேற்புசீறிப்பாய்ந்து வந்த காவிரி நீர்... நாகை விவசாயிகள் உற்சாக வரவேற்பு

Update: 2025-06-23 13:47 GMT

கடைமடைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் - விவசாயிகள் உற்சாக வரவேற்பு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி கடைமடையை சென்றடைந்த‌து. கடந்த 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 10 தினங்களுக்கு பின்னர் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் நரியங்குடிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்தது. விவசாயிகளும் பொதுமக்களும் ஆரத்தி எடுத்து, மலர் மற்றும் நெல்மணிகளை தூவி காவிரி நீரை உற்சாகமாக வரவேற்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்