திடீரென ரிப்பேரான கார்.. அடுத்தடுத்து மோதிய 4 கார்கள் - அலறிய மக்கள்

Update: 2025-06-14 02:31 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே நடந்த விபத்தில் அடுத்தடுத்து 4 கார்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் மேம்பாலத்தில், பிரகதீஸ்வரன் என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென பழுதாகி நின்ற நிலையில், பின்னே வந்த கார் சற்று ஓரமாக நிறுத்தப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத நிலையில் அடுத்தடுத்த வந்த மூன்று கார்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி நின்றது. இந்த விபத்தில் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டு, மொத்தமாக நான்கு கார்கள் சேதமடைந்துள்ளது. இது குறித்து தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்