மின்வயர் அறுந்து ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
சென்னை வியாசர்பாடி அருகே மின்வயர் அறுந்து விழுந்ததால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கான ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. மறுபுறத்திலும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.